தமிழ்த்தேச தாவரவியல் இணையம்
மூலிகை விளக்க இணைய அகராதி - தாவரவியல் அகராதி - தாவர அரிச்சுவடி - ஆவணக்காப்பகம் - மின்னூலகம்
பொறுப்பு அறிவிக்கை
"தமிழ்த்தேச தாவரவியல் இணையம்" என்ற இந்த இணையதளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தாவர இனங்கள், பதிவேற்றப்பட்டுள்ள ஒளிப்படங்கள், சொல்லப்பட்டுள்ள தகவல்கள் ஆகியவை மிக மிகச் சரியானது என்பதை உறுதிப்படுத்த நியாயமான அனைத்துவித முயற்சிகளையும் செய்துள்ளோம். எவ்வாறாயினும், தகவல்களின் உண்மை, முழுமை, நம்பகத்தன்மை அல்லது பொருந்தக்கூடிய தன்மை குறித்து இணையதள நிர்வாகிகள், தாவர ஆவணவியலாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் நேரடியாக எந்த உத்தரவாதத்தையும் வெளிப்படுத்தவில்லை அல்லது மறைமுகமாக எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. இணையத்தில் மற்றும் தளத்தில் உங்கள் சுய தேடுதலில் சரியான பயன்பாட்டுத் தகவலை நீங்கள் பெறமுடிந்தாலும், எந்த நேரத்திலும் தளத்திலுள்ள தகவல்களில், ஒளிப்படங்களில், ஆவணங்களில் மாற்றங்களைச் செய்வதற்கான உரிமையை, தாவர ஆவணவியலாளர்கள் கொண்டுள்ளனர். மற்றும் தமிழ்த்தேச தாவரவியல் இணையம் கொண்டுள்ளது. தளத்தின் உள்ளடக்கங்கள், தாவர தகவல்கள், மருத்துவ தகவல்கள், ஒளிப்படங்கள், ஆன்மீகத்தகவல்கள் ஆகியவற்றை அதிகாரப்பூர்வ உண்மையாக எந்த ஒரு மூன்றாம் தரப்பு ஆதாரமாகவும் பயன்படுத்த முடியாது. இணையதளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தாவர இனங்களின் மருத்துவம் சார்ந்த, மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் அனைத்தும் தள உறுப்பினர்களின், ஆவணவியலாளர்களின் சுய அல்லது அனுபவ அல்லது கேள்வியறிவின் மூலம் அவர்கள் தன்னார்வத்தின் வழியாக பதிவுசெய்யப்பட்டதே தவிர, மேற்படி தகவல்களுக்கு தமிழ்த்தேச தாவரவியல் இணையம் பொறுப்பேற்காது. மேலும் கருத்துக்கள் மற்றும் மருத்துவ தகவல்களுக்கு, இவ்விணையம் எவ்வகையிலும் பொறுப்பாகாது. இணையதளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தாவர இனங்களின் மீதான மாற்றுக்கருத்துகள், அல்லது அது தொடர்பான தோல்விகரமான மருத்துவ ஆய்வுகள், தோல்விகரமான சோதனை முடிவுகள், பொருளிழப்பு ஆகியவற்றிற்கு அந்த குறிப்பிட்ட தாவர இனத்தின் ஆவணவியலாளர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவித பொறுப்பேற்றலும் ஒரு தனிப்பட்ட பயனருக்குத் தரவில்லை. தமிழ்த்தேச தாவரவியல் இணையமும் எந்த உறுதிமொழியும் பொறுப்பேற்றலும் தரவில்லை. இதனால் ஏதேனும் சட்ட வழக்குகள் ஏற்பட்டால், ஆவணவியலாளர் மற்றும் தமிழ்த்தேச தாவரவியல் இணையம் எதிர்த்தரப்பாக சேர்க்க முகாந்திரம் இல்லை. இந்தத்தளத்தின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனிப்பட்ட பயனர் எடுக்கும், எந்த ஒரு முடிவு மற்றும் அல்லது ஆய்வும் அவருடைய தனிப்பட்ட சுய விருப்புரிமை மற்றும் தன்னிச்சையானதாகும். தமிழ்தேச தாவரவியல் இணையம் அதற்கு எவ்விதத்திலும் உரிமை கோரல் அல்லது இழப்பீடு செய்யாது. இந்த இணையதளத்தின் ஒரே நோக்கம், மறைந்து வரும் தமிழக மற்றும் இந்திய, இலங்கை தாவர இனங்களின் பெயர்களை, பயன்பாட்டினை, மற்றும் அதன் வழியாக சிறப்புமிக்க தமிழ் மருத்துவத்தை, பாதுகாத்து வைத்தல் என்பதே அன்றி வேறு ஏதுமில்லை. மேற்கண்ட நோக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக, இந்த தளத்தின் தகவல்கள், ஒளிப்படங்கள், நூல்கள், ஆவணங்களை பதிவிறக்கம் செய்யவும், சுயபயன்பாட்டிற்காக சமூக தொடர்பு செயலிகளில் மேற்கோள் காட்டிடவும் தமிழ்த்தேச தாவரவியல் இணையம் அனுமதி அளிக்கிறது. மேலும் இந்த இணையதள பயன்பாடு முற்றிலும் உண்மையானது, என்று தமிழ்த்தேச தாவரவியல் இணையம் உறுதி அளிக்கவில்லை! என்ற புரிதலுடன் இங்கு உள்ள தகவல்கள், ஒளிப்படங்கள், ஆவணங்கள், நூல்கள் அனைத்தும் பொது சேவையாக வழங்கப்படுகிறது. மேலும் தளத்தில் பதிப்புரிமை மீறல் அல்லது ஏதேனும் உரிமைகோரல்கள் இருந்தால் தயைகூர்ந்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். நிச்சயம் சுமூகமாக தீர்வு அளிக்கப்பெறும்.