தமிழ்த்தேச தாவரவியல் இணையம்
மூலிகை விளக்க இணைய அகராதி - தாவரவியல் அகராதி - தாவர அரிச்சுவடி - ஆவணக்காப்பகம் - மின்னூலகம்
தள இயங்கு முறை
தாவர ஆவணப்படுத்தல் : முதல் படியாக, இந்த தளத்தில் ஆவணவியலாளர் என்பவர், இத்தளத்தில், விதிகளுக்குட்பட்டு, உள்நுழைய/பதிவுசெய்ய என்கிற இணைப்பு வழியாக, தன்னுடைய சுய விவரங்களை முறையாகப் பதிவு செய்து, தனக்கான சுயவிவரக் கணக்கைக் கொண்டுள்ள ஆரம்பநிலை தாவர ஆர்வலர், ஆய்வாளர், பேராசிரியர், சித்த மருத்துவர் ஆகியோரைக் குறிக்கும். சுயவிவரமானது, தள நிர்வாகிகள் எவரேனும் ஒருவரால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, தாவர ஆவணப்படுத்தலானது தொடங்கப்படுகிறது! இரண்டாம் படியாக, தளத்தில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட தாவர ஆவணமும், அதனை ஆணப்படுத்திய ஒரு ஆவணவியலாளரின் சுயஆய்வு அல்லது பரம்பரைக் கல்வி அல்லது கேள்வியறிவு அல்லது சுயதேடல் வழியாக பெறப்பட்டு, இந்த தளத்தில் புதிய தாவரம் ஆவணப்படுத்தல் என்கிற இணைப்பு வழியாக, மிகவும் கவனமாகப் பதிவுசெய்யப்படுகிறது. பிறகு அந்த ஆவணமானது, தள நிர்வாகிகளின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறது! மூன்றாம் படியாக, தாவர ஆவணமானது, தளத்தின் தாவரவியல் அறிஞர்கள், தாவரவியல் பேராசிரியர்கள், சித்த மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள், மற்றும் தள நிர்வாகிகளால் ஆராயப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, வேண்டிய மாற்றங்களைச்செய்த பிறகு, தளத்தில் வெற்றிகரமாகக் ஆவணப்படுத்தப்படுகிறது!