உள்நுழைய / பதிவு செய்ய

தமிழ்த்தேச தாவரவியல் இணையம்

மூலிகை விளக்க இணைய அகராதி - தாவரவியல் அகராதி - தாவர அரிச்சுவடி -
ஆவணக்காப்பகம் - மின்னூலகம்

இணையதளம் பற்றி

முதல் சித்தனாம் ஈசன் திருவருளால், அவர் வழிவந்த பதினெட்டு சித்தர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நிலத்தின் இயற்கை அணிகலன்களான, புல், பூண்டு, பூஞ்சை முதல் பெருமரங்கள் வரை அனைத்தையும் அடையாளப்படுத்தி, வகைப்படுத்திய, வரிசைப்படுத்திய, தமிழரின் தாவரவியல் ஆவணக்காப்பகம் இதுவாகும்.

இன்று உலக மக்களை, பல காலகட்டங்களிலும் நோய்களில் இருந்து காக்கும், ஆதிதமிழரின் பாரம்பரிய, இயற்கை, சித்தர் மருத்துவங்களின் ஆணிவேரான மூலிகைத்தாவரங்களை, உலகின் முதல் தாவரவியல் ஆராய்ச்சியாளர்களான சித்தர்களின் மூலிகை வகைப்பாட்டியல் மற்றும் குணபாட முறையில் வரிசைப்படுத்தி, காலத்தால் அழியாமல், கட்டமைத்து வைத்திருக்கும் தாவரவியல் மின்னூலகம் இதுவாகும்.

இன்று நமக்கும், நாளை நமது சந்ததிக்கும், பல நூறு தலைமுறை கடந்து, தமிழ்நிலத்தில் பிறக்கும் பிள்ளைக்கும், சித்தர் மருத்துவத்தின் துணைகொண்டு உலகின் கடைசி உயிரைக் காப்பாற்றப்போகும் மருத்துவனுக்கும், தமிழ்நிலத்தின் சரியான மூலிகைகளை, தாவரங்களை அடையாளப்படுத்திட உதவுவதுதான், இந்த தமிழ்த்தேச தாவரவியல் இணையம். இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து மூலிகைகளுக்கும் சமர்ப்பணம்.

தற்போதைய தாவர ஆவணம்....

நமது இணையதள ஆவணவியலாளர்கள், அரிதான வெள்ளை நாவல் மரத்தினை ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

தகவல் சேகரிப்பு பகுதி